சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 67வது படமாக உருவாகிறது. கடந்த ஜன., 2 முதல் படப்பிடிப்பு துவங்கியது. சென்னையில் ஒருக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நாளை(பிப்.,1) முதல் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக விஜய், லோகேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர்.
நேற்று முதல் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளராக அனிருத், ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வந்தது. இன்று(ஜன., 31) படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவித்தனர்.
அந்தவகையில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் 67 படம் மூலம் முதன்முறையாக தமிழில் களமிறங்குகிறார் சஞ்சய் தத். படத்தில் அவர் வில்லனாக தோன்றுகிறார். மேலும் சாண்டி, மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.