உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, ‛ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து ‛‛தெறி, மெர்சல், பிகில்'' என மூன்று படங்களை கொடுத்த இவர் தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீக்கும், ‛சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த பிரியாவிற்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பிரியாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு இன்று(ஜன., 31) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி பிரியா வெளியிட்ட பதிவு : ‛‛எல்லோரும் சொல்வது சரி தான். இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை. எங்களது ஆண் குழந்தை இங்கே. பெற்றோராக அற்புதமான புதிய சாகசம் இன்று துவங்குகிறது. நன்றியுடன். மகிழ்ச்சியாக.... பாக்கியமாக...'' என பதிவிட்டுள்ளார்.