ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவான அலோன் என்கிற திரைப்படம் கடந்த ஜனவரி 26ம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் மோகன்லால் நடிக்கிறார் என்பதால் இயல்பாகவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் மோகன்லால் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கான கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் படம் வெளியான நாளிலிருந்து இந்த படத்திற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் கூடவில்லை. படம் வெளியான இந்த இரண்டு நாட்களில் உலகம் முழுமைக்கும் மொத்தமாகவே இதுவரை ஒரு கோடி தான் வசூல் வைத்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் இது மோகன்லாலின் சொந்த படம் என்பதாலும் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பதாலும் மிகக்குறைந்த நாட்களிலேயே ஒரு குறிப்பிட்ட லொகேஷனிலேயே இந்த படம் எடுக்கப்பட்டதாலும் இந்த படத்தின் பட்ஜெட் வெறும் இரண்டரை கோடியில் அடங்கிவிட்டது என்றும் அதனால் நட்டம் பெரிய அளவில் இருக்காது என்றும் கூட சொல்லப்படுகிறது.
மேலும் பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி இருந்தால் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்றும், இந்த படத்தை தவறுதலாக தியேட்டரில் ரிலீஸ் செய்தது படத்திற்கு எதிர்ப்பதமான ரிசல்ட் ஆக அமைந்து விட்டது என்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.