எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமான நடிகர் கிரணுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், பொம்மு குட்டி அம்மாவுக்கு ஆகிய தொடர்களில் நடித்துள்ள கிரண் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஒரு நடன கலைஞராக தனது திறமையை நிரூபித்தார். நடிகர், உதவி இயக்குநர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்ட கிரண் தற்போது சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 'லிப்ட்', 'எஸ்டேட்' என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கிரணுக்கும் மஞ்சுஷா காரம்லா என்ற பெண்ணுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது கிரணும் மஞ்சுஷாவும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் புகைப்படங்களை கிரண் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திரை பிரபலங்களான அஞ்சனா ரங்கன், கீர்த்தி சாந்தனு, சந்தோஷ் பிரதாப், கனி, விஜயலெட்சுமி உட்பட பல ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.