நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. முதல் நாளில் 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் இரண்டாம் நாளிலும் 100 கோடியைக் கடந்தது. நேற்றைய மூன்றாம் நாளிலும் 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் 100 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக 200 கோடியையும், வெளிநாடுகளில் 100 கோடியையும் கடந்துள்ளது. இந்திய நிகர வசூலாக 161 கோடி வரை பெற்றுள்ளது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம்.
இதற்கு முன்பு தென்னிந்தியப் படங்களான 'கேஜிஎப் 2' 140 கோடியும், 'பாகுபலி 2' 127 கோடியும் பெற்ற சாதனையை 161 கோடி வசூலித்து 'பதான்' புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். முதல் முறையாக ஒரு ஹிந்திப் படம் இந்த அளவு வசூலித்திருப்பது பாலிவுட்டினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் 400 கோடி வசூலைத் தாண்டிவிடும் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.




