''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த 2018ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் திரைக்கு வந்த ஜீரோ என்ற படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து ராக்கெட்ரி, லால்சிங் சத்தா, பிரம்மாஸ்திரம் போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஷாருக்கான். இந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பதான் படம் வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சல்மான் கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த 25 ஆம் தேதி திரைக்கு வந்து இந்த படம் வெளியான அனைத்து பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்திய அளவில் படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்து இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவில் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம் முதல் சனிக்கிழமை அன்று 2.42 மில்லியன் வசூலித்தது. யுஎஸ்ஏ திரையரங்குகளில் முதல் சனிக்கிழமை அன்று பதான் படம் 2.85 மில்லியன் வசூலித்துள்ளது. படத்தின் தொடக்க வார இறுதியில் வட அமெரிக்காவில் 8 மில்லியனுக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முந்தைய வசூல் சாதனை படங்களான பாகுபலி -2 , கேஜிஎப் -2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை ஷாருக்கானின் பதான் படம் முறியடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.