பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் மீது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாக நடந்து வருகிறார். இப்படி சோகத்தில் இருந்துவரும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள 'டெல் இட் லைக் எ உமன்' என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள அப்ளாஸ் என்கிற பாடல் 95 வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், “இந்த மகிழ்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே வரவில்லை. ஆஸ்கர் விருதுடன் நாங்களும் இணைந்து இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. 'டெல் இட் லைக் எ உமன்' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. மேலும் இதே பிரிவில் போட்டிக்கு தேர்வாகியுள்ள நாட்டு நாட்டு பாடலின் வெற்றிக்காக ஆர்ஆர்ஆர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.