லத்தி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் சுனில் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தான் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் சுனில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல சிவகார்த்திகேயனின் மாவீரன், கார்த்தியின் ஜப்பான் என நான்கு படங்களில் நடிக்கிறார் சுனில்.