ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை |
கமல் நடித்த விக்ரம் படத்தை அடுத்து தற்போது விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதற்கு முன்பு தான் இயக்கிய விக்ரம் படத்தில் முந்தைய படங்களின் கேரக்டர்களை இடம்பெறச் செய்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய் 67வது படத்திலும் இதற்கு முன்பு கார்த்தியை வைத்து தான் இயக்கிய கைதி படத்தின் டில்லி கேரக்டரை சிறப்பு தோற்றத்தில் இடம்பெறச் செய்யப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து முன்பு சர்தார் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதைப்பற்றி லோகேஷ் கனகராஜ் இடத்தில்தான் கேட்க வேண்டும். என்னால் எந்த பதிலும் சொல்லமுடியாது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் 67வது படத்தில் டில்லி கேரக்டர் இடம் பெறுவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.