பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் உருவான கன்னடப் படமான 'காந்தாரா' கடந்த வருடம் வெளிவந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. வட கர்நாடகா கடற்கரைப் பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் குல தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து வெளிவந்த அப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலைப் பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். “படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கான ஆராய்ச்சியை செய்வதற்காக கர்நாடகா கடற்கரைப் பகுதிக்கு தனது உதவியாளர்களுடன் ரிஷப் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்ட்டிற்கு ஏற்றபடி மழைக் காலத்தில் நடைபெற உள்ளது. முதல் பாகத்தை விடவும் கூடுதலான செலவில் படத்தைத் தயாரிக்க உள்ளோம். அடுத்த வருட கோடைக் காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
'காந்தாரா 2' படம் 'காந்தாரா' படத்திற்கு முந்தைய கதையைச் சொல்லக் கூடிய படமாக எடுக்கப்பட உள்ளதாம். காந்தாரா படத்தில் இடம் பெற்ற காவல் தெய்வம், காவல் தெய்வத்தின் கற்சிலையைக் கொண்டு சென்ற மலைநாட்டு மன்னன், இயற்கை வழிபாடு ஆகியவை 'காந்தாரா 2' படத்தின் கதையாக எழுதப்பட உள்ளது.




