கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி பத்து நாட்களாகிவிட்டது. இரண்டு படங்களில் 'வாரிசு' படம் 200 கோடி வசூலைக் கடந்ததாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். 'துணிவு' படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே, இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படங்களின் முன்பதிவு எப்படி இருக்கிறது என ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களுக்குச் சென்று பார்வையிட்டோம். வார இறுதி நாட்களில் அந்தப் படங்களுக்கு இது இரண்டாவது வார இறுதி நாட்கள். கடந்த சில வருடங்களாகவே ஒரு சில படங்கள்தான் இரண்டாவது வாரத்திற்கும் தாக்குப் பிடிக்கின்றன. அந்த விதத்தில் 'வாரிசு, துணிவு' இரண்டு படங்களுமே சிறப்பாகவே தாக்குப் பிடித்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாநரங்களில் இந்தப் படங்களுக்கு எப்படி முன்பதிவு இருக்கிறது என சில முக்கிய தியேட்டர்கள், சில சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களை அலசிப் பார்த்ததில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 'வாரிசு, துணிவு' இரண்டுக்கும் சமமான அளவில்தான் முன்பதிவு நடந்திருக்கிறது. சில சிங்கிள் ஸ்கீரின்களில் 'வாரிசு' முன்பதிவு கொஞ்சம் கூடுதலாக நடந்திருக்கிறது. பல சிங்கிள் ஸ்கீரின்களில் இரண்டு படங்களுக்கும் குறைந்த அளவில்தான் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சுமார் 80 சதவீதம் வரையில் முன்பதிவு இருப்பதால் இன்றும், நாளையும் இரண்டு படங்களுக்குமான வசூல் நன்றாகவே இருக்க வாய்ப்புள்ளது.
அதே சமயம், திங்கள்கிழமை முதல் இரண்டு படங்களுக்குமான முன்பதிவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. இரண்டு படங்களின் முக்கியமான வசூல் நாளையுடன் முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது.