பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது ஜவான் மற்றும் பதான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டுள்ள ஷாருக்கான் தற்போது ஆசியாவின் பணக்கார நடிகர் என்றும் உலக அளவில் நான்காவது பெரிய பணக்கார நடிகர் என்றும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களான டாம் குரூஸ், ஜாக்கிசான் ஆகியோர்தான் இடம் பெற்றிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களை ஷாருக்கான் பின் தள்ளி இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,264 கோடி) என்றும் கூறப்படுகிறது.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வரும் ஷாருக்கான், விஎப்எக்ஸ் மற்றும் விளையாட்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி பல்வேறு துறைகள் மூலம் சம்பாதித்து வருவதால் தற்போது அவர் உலகின் முதல் எட்டு பணக்கார நபர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள இந்த பட்டியலில் ஷாருக்கானின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர்கள் என்றும், டாம் குரூஸ் சொத்து மதிப்பு 620 மில்லியன் டாலர்கள் என்றும், ஜாக்கிசான் 520 மில்லியன் டாலர்கள், ஜார்ஜ் குளூனி 500 மில்லியன் டாலர்கள், ராபர்ட் டி நிரோ 500 மில்லியன் டாலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.