100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. அதையடுத்து தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றவர் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தார். இந்நிலையில் வருகிற 20ம் தேதியிலிருந்து இடைவிடாமல் படங்களில் தான் நடிக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு தற்போது தனது கைவசம் ஏழு படங்கள் மட்டுமின்றி 2 வெப் தொடர்களும் இருப்பதாகவும் கூறும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் நான் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி சினிமாவில் நான் முன்னணி கதாநாயகி ஆனதிலிருந்து 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர்களை வளர்க்கும் ஒரு அம்மாவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை எடுத்துக் கொடுத்ததாக கூறும் ஹன்சிகா, சினிமாவில் நடிப்பதை கடந்து இதுபோன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுக்கிறது. நான் இப்படி குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதற்கு முக்கிய காரணமே எனது அம்மாதான். இதன் மூலம் எனக்கு கிடைத்து வரும் இந்த சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டு இருக்கிறார் ஹன்சிகா.




