தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! |

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படத்தின் வசூல் பற்றி இதுவரை படத்தின் தயாரிப்பாளரோ, வினியோகஸ்தரோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அப்படத்துடன் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு' படம் ஒரு வாரத்தில் ரூ.210 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்கள்.
'துணிவு' படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என அஜித் ரசிகர்கள் கடந்த பத்து நாட்களாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் படக்குழு சார்பில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, தயாரிப்பாளர் போனி கபூருக்கு நெருக்கமானவரும் 'துணிவு' படத்தின் வினியோகஸ்தர்களில் ஒருவருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் டுவிட்டரில் புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், “வெளிநாடுகளைப் போல வெளிப்படையான பாக்ஸ் ஆபீஸ் டிராக்கிங் முறை வர நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என டிராக்கர்கள் விமர்சகர்கள் ஆகியோருக்கு சொல்லிக் கொள்கிறேன். அதுவரை பாக்ஸ் ஆபீஸ் சாதனை என்ன என்பதைப் பற்றி சண்டையிட்டுக் கொள்ளாமல் சினிமாவை அதன் தூய்மையான தன்மையுடன் ரசியுங்கள். இரண்டு படங்களையும் வெற்றிப் படமாக்கியதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் டிராக்கர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் எந்த ஒரு ஆதராமும் இல்லாமல் 'துணிவு' படத்தை விடவும், 'வாரிசு' படத்தின் வசூல் அதிகம் என்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் கடந்த ஒரு வாரமாகவே ராகுல் பதிலுக்கு கமெண்ட் போட்டு வந்தார். இந்நிலையில் இப்படி ஒரு பதிவை இன்று அதிகாலையில் பதிவிட்டுள்ளார்.
படத்தை வெளியிட்டுள்ள வினியோகஸ்தர்களுக்கே படத்தின் வசூல் என்னவென்று தெரியாத நிலையில், இந்த டிராக்கர்கள் தொடர்ந்து பொய்யான வசூல் விவரங்களைப் பதிவிட்டு வருவதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.