குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வௌவரவிருக்கும் விக்ரம் பிரபு படம் பாயும் ஒளி நீ எனக்கு. கார்திக் அத்வைத் என்ற புதுமுகம் தயாரித்து இயக்கி உள்ளார். இவர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பல விளம்பர படங்களையும் இயக்கி உள்ளார். வாணிபோஜன், ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் டாலி தனஞ்செயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த படத்தின் திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமத்தை எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.