''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பொங்கலுக்கு வெளியான 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களில் 'வாரிசு' படத்திற்கு வெளிநாடுகளில் மிகப் பெரும் வசூல் கிடைத்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரு வாரத்திற்குள்ளாக 1 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடியே 10 லட்சம். இந்த வசூல் விவரத்தை படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், கனடாவில் மட்டும் 4 லட்சம் யுஎஸ் டாலர் வசூலை அள்ளியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 24 லட்சம். இன்னும் சில நாட்களில் 'பிரேக் ஈவன்' நடந்து லாபக் கணக்கை ஆரம்பித்துவிடும் என்கிறார்கள். 'துணிவு' படமும் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. அங்கு இந்தப் படம் ஏற்கெனவே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது.
'வாரிசு, துணிவு' இரண்டுமே 1 மில்லியன் வசூலைக் கடந்திருந்தாலும், தெலுங்குப் படமான 'வால்டர் வீரய்யா' படம் 1.9 மில்லியன் வசூலைக் கடந்து தென்னிந்தியப் படங்களில் முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமல்ல கடந்த வார யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் டாப் 10ல், 10வது இடத்தைப் பிடித்துள்ளது. மற்றொரு தெலுங்குப் படமான 'வீரசிம்ஹா ரெட்டி' 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்து லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளது.