நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலித்தது என யார் முதலில் அறிவிக்கப் போகிறார்கள் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
நேற்று நடந்த 'வாரிசு' படக்குழுவின் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் கூட அது பற்றி அறிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் எதற்கு 100 கோடி என சொல்ல வேண்டும், நேரடியாக 150 கோடி வசூல் என அறிவித்தது 'வாரிசு' படக்குழு. 5 நாளில் இந்த வசூலை எட்டி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், 'துணிவு' படக்குழு இன்னும் 100 கோடி வசூலைக் கடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது. இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடியப்போகிறது.
'துணிவு' படமும் இந்நேரம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அதை ரசிகர்களும் கொண்டாட முடியும். இருப்பினும் 'ரியல் வின்னர்' என்று மட்டுமே அப்படக்குழுவினர் இன்னமும் குறிப்பிட்டு வருகிறார்கள். என்ன வசூல் என படக்குழுவினர் இன்றாவது அறிவிப்பார்களா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.