பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் படங்கள் இல்லை என்றாலும், பிற மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் நடித்த வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் தற்போது திரைக்கு வந்துள்ளன. அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் ஐதராபாத்தில் நடைபெற்றபோது அதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு மனநல பிரச்னை ஏற்பட்டதின் காரணமாகத்தான் அவர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அது குறித்து உடனடியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ‛‛எனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதினால் தான் வால்டர் வீரய்யா படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பரப்பப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நல்ல முயற்சி என்றும் அதற்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.