பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் பொதுவாக தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் கதாநாயகிகள்தான் அதிகமாக இருப்பார்கள். தமிழிலிருந்து தெலுங்கு பக்கம் செல்பவர்கள் மிகவும் குறைவே. தமிழில் 'மேயாத மான்' படத்தின் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடந்த ஆறு வருடங்களில் 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது தமிழில் 'பத்து தல, அகிலன், ருத்ரன், டமாண்டி காலனி, பொம்மை, இந்தியன் 2' என பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் 'கல்யாணம் கமநீயம்' என்ற படம் இந்த வாரம் பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. சந்தோஷ் சோபன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை அனில் குமார் இயக்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் பிரியா நல்ல வரவேற்பைப் பெறுவார் என டோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள்.