Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வாரிசு' டிரைலர் - எதிர்பார்த்த வரவேற்பு பெறாதது ஏன்?

06 ஜன, 2023 - 10:57 IST
எழுத்தின் அளவு:
'Varisu'-trailer---Why-it-didn't-get-the-expected-reception?

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. தமிழ் சினிமா டிரைலர் வரலாற்றில், ஏன் தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'துணிவு' படத்தின் வரலாற்றையே முறியடிக்க முடியாமல் தடுமாறிப் போய்விட்டது.

விஜய் தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். அவரிடமிருந்து ஒரு முழுமையான ஆக்ஷன் படத்தையே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் படம் ஒரு சென்டிமென்ட் குடும்பப் படமாக அமைந்துள்ளது.
டிரைலரின் ஆரம்பத்திலேயே வரும் பெண் குரல் ஒரு சீரியல் எபெக்ட்டையே கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் நடிகர் சுமனின் குரல், பல தெலுங்கு டப்பிங் படங்களில் கேட்ட ஒரு குரல் என்பதால் ஒரு டப்பிங் பட உணர்வை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டது.

“எல்லா இடமும் நம்ம இடம்தான்”, “இன் பிசினஸ் ஆல்வேஸ் பீ அலர்ட், நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும், கண்ணு தொறந்தேதான் இருக்கணும்”, “வேடனுக்கு வேட்டைத் தொழில்”, “பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உக்கார்றான் இல்ல அவன்ட்டதான் இருக்கும், நம்ம பவர் அந்த ரகம்”, “அன்போ, அடியோ எனக்குக் கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கணும், ஏன் சொல்லு, நீ எதைக் கொடுத்தாலும் நான் அதை ட்ரிபிளா திருப்பிக் கொடுப்பேன்“, “கிரவுண்டு மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம், ஆனால், ஆடியன்ஸ் மட்டும் ஒருத்தரைத்தான் பார்ப்பாங்க, கேள்விப்பட்டிருக்கியா, ஆட்ட நாயகன்”, “குடும்பம்னா குறை இருக்கும்தான், ஆனா நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு குடும்பம்தான்,” ஆகிய டிரைலரில் உள்ள வசனங்கள் 'க்ரிஞ்ச்' வசனங்களாகவே உள்ளன.

விஜய் - பிரகாஷ்ராஜ் மோதல் என்றாலே 'கில்லி' படத்தின் 'வேலு - முத்துப்பாண்டி' தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மோதலை மிஞ்ச இனி வேறு எந்தப் படத்தாலும், கதாபாத்திரங்களாலும் முடியாது. இரண்டு நிமிட டிரைலரின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு சீரியலுக்கான டிரைலரோ என யோசிக்க வைக்கிறது. சீரியல்களில் கூட பரபரப்பாக பின்னணிக் குரல் கொடுத்து டிரைலரைக் 'கட்' செய்வார்கள்.

விஜய்யின் பன்ச் வசனங்கள் ஒவ்வொன்றும் கதையோடு சேர்ந்து வருவது போலத் தெரியவில்லை. இடைச் செருகலாக சேர்த்து வைக்கப்பட்டவையாகவே தெரிகிறது. ராஷ்மிகா மந்தனாவிற்கு டிரைலரில் ஒரு வசனத்தைக் கூட வைக்கவில்லை.
டிரைலரில் விஜய்க்குப் பதிலாக மகேஷ் பாபு இருந்திருந்தால் கூட வித்தியாசம் தெரிந்திருக்காது என்றே தோன்றுகிறது. விஜய்க்காக தனிப்பட்டு வடிவமைக்கப்பட்ட கதை போலத் தெரியவில்லை. மகேஷ்பாபுவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் நடித்திருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அஜித்தின் 'துணிவு' டிரைலர் முழு ஆக்ஷனாக இருக்கும் போது, இந்த 'வாரிசு' டிரைலர் அப்படியில்லாததும் குறைதான். ஒரு படத்தின் டிரைலர் தான் அந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களை ஆவலுடன் தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கும். அப்படி ஒரு ஆவலை ஏற்படுத்தாத டிரைலராகவே 'வாரிசு' டிரைலர் இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 'பீஸ்ட்' டிரைலரின் சாதனையை முறியடித்து தென்னிந்தியாவின் நம்பர் 1 டிரைலர் என்ற சாதனையை சில நாட்களில் இந்த 'வாரிசு' டிரைலர் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 24 மணி நேர சாதனையில் 'துணிவு' டிரைலர் சாதனையை முறியடிக்க முடியாமல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
டிரைலர் கொஞ்சம் ஏமாற்றி 'அவுட்' ஆக்கினாலும், மெயின் பிக்சர் விஜய் சொல்வது போல 'ஆட்ட நாயகன்' ஆக அமைந்தால் அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
நியூயார்க்கில் விருது பெற்ற ராஜமவுலிநியூயார்க்கில் விருது பெற்ற ... ‛ஆஸ்கர்' நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்: திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து ‛ஆஸ்கர்' நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

08 ஜன, 2023 - 00:53 Report Abuse
shanmugarajan Mersel padathukku vijay moviekku ethavathu oru moviekkavathu honest review koduthurukingala dinamalar,neenga vijay padattha oru padama pakkurathillai joseph vijay appadingura oru thanimanithanukku ethirathan karuthu solving.
Rate this:
BALU - HOSUR,இந்தியா
06 ஜன, 2023 - 20:35 Report Abuse
BALU தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்களை முட்டாளாக்கி வெட்டிப் பயல்களாக்கும் விஜய்யும் அஜித்தும் பிளாப் ஆகி திரைத்துறையை விட்டு ஓய்வு பெற்றால் தான் தமிழகத்திற்கு நல்லது.அப்போது தான் இன்பநிதி சூப்பர் ஸ்டாராக முடியும்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06 ஜன, 2023 - 17:25 Report Abuse
J.V. Iyer விஜய் ஒரு நல்ல குடும்ப படத்தில் நடித்தால் உங்களுக்கு பொறுக்காதே. இது ஒரு நல்ல குடும்பப்படமாக இருப்பின், மிகப்பெரிய வெற்றி என்பது நிச்சயம். என்ன எப்பப்பார்த்தாலும் அடி, வெட்டு, குத்து என்று...
Rate this:
mohan - chennai,இந்தியா
07 ஜன, 2023 - 16:41Report Abuse
mohanபீஸ்ட் பார்ட் ரெடி...
Rate this:
srinivasan - trichy,இந்தியா
06 ஜன, 2023 - 17:15 Report Abuse
srinivasan படமும் மொக்கை தான்
Rate this:
Mohan - Thanjavur ,இந்தியா
06 ஜன, 2023 - 15:50 Report Abuse
Mohan அப்பன்,ஆத்தா அரிசிக்கும்,1000க்கும் ரேசன்கடையில நிக்குது. நீங்க முதல்காட்சி பார்க்க முட்டிக்கிட்டு இருக்கீங்க.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in