பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
1967ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி, சென்னையில் பிறந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தன் அப்பா இசை துறையில் இருந்ததால் அவரைப்போலவே தானும் இசையின் மீது நாட்டம் கொண்டு இசை துறைக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை மேதைகளின் உதவியாளராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திறமையை பார்த்து வியந்த இயக்குநர் மணிரத்னம், தனது ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
முதல்படமே சூப்பர் ஹிட்டாக, அனைவரின் பார்வையும் ரஹ்மான் பக்கம் திரும்பியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்தவர் ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க துவங்கினார். இந்தியாவின் 50வது ஆண்டு சுதந்திர நாளையொட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' இசைத் தொகுப்பு இன்றுவரை ஓயவில்லை.
அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த. தமிழ் கலைஞனின் புகழ் உலகம் முழுக்க பரவியது. ஆஸ்கர் விருது மட்டுமல்லாது .கோல்டன் குளோப், கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார். நான்கு முறை தேசிய விருதுகள், இந்தியாவின் பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் குவித்துள்ளார். இசையுலகில் இவ்வளவு பெருமையும் சாதனையும் படைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.