மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது ஒரு கதையை அவரிடம் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் ஜெயம் ரவி ஒரு ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அகிலன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை இயக்கிவிட்டு அடுத்து ஜெயம் ரவியை லோகேஷ் இயக்க உள்ளாரா அல்லது விஜய்யின் 67வது படத்திலேயே அவரை நடிக்க வைக்க பேசி உள்ளாரா என்பது விரைவில் தெரிய வரும்.