2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. அது குறித்து நேற்று வெளியிட்ட போஸ்டர்களின் டிசைன்களில் தமிழ் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளனர். அதேசமயம், தெலுங்கு டிரைலருக்கான அறிவிப்பு போஸ்டரில் 'வாரிசுடு' என்ற தலைப்பை மட்டும் தெலுங்கில் போட்டுள்ளனர்.
தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர், தெலுங்கு இசையமைப்பாளர் என 'வாரிசு' படத்தில் தெலுங்கு வாசம் அதிகமாகவே வீசுகிறது. இப்படத்திற்காக இதுவரை வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் ஆங்கிலப் போஸ்டர்கள்தான் அதிகமாக வெளியாகி உள்ளன. இன்றைய விளம்பரங்களைக் கூட ஆங்கிலத்தில்தான் வெளியிட்டுள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இனிமேலாவது தமிழிலும் போஸ்டர்களை வெளியிடுவார்களா படக்குழுவினர்.
ஒரு வேளை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே போஸ்டர்களை வெளியிடுகிறார்கள் போலிருக்கிறது. தமிழைச் சேர்ந்த ஒரு உதவி இயக்குனரைக் கூடவா வம்சி பைடிபள்ளி வைத்துக் கொள்ளவில்லை ?.