2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்கள் இந்த வருடப் பொங்கலுக்கு வெளியாகிறது. இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அமெரிக்காவில் அவற்றின் முன்பதிவு ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து வருகிறது.
பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவைப் பொறுத்தவரையில் 'துணிவு' படத்தை விட 'வாரிசு' படத்திற்கான முன்பதிவு அமோகமாக நடந்து வருகிறது. இதுவரையில் 'வாரிசு' படத்திற்கு 83 இடங்களில் 192 காட்சிகளுக்கான முன்பதிவின் மூலமாக 61 ஆயிரம் யுஎஸ் டாலரும், 'துணிவு' படத்திற்கு 77 இடங்களில் 148 காட்சிகள் மூலம் 32 ஆயிரம் யுஎஸ் டாலர் தொகையும் கிடைத்துள்ளதாம். இரண்டு படங்களும் வெளியாக இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் பிரிமீயர் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தெலுங்கு படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தமிழ்ப் படங்களான 'வாரிசு, துணிவு' ஆகியவற்றிற்கான பிரிமீயர் முன்பதிவுத் தொகை குறைவாகவே உள்ளதாம். அமெரிக்காவில் தமிழர்களை விட தெலுங்கர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் ஒரு காரணம்.