அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
‛கனெக்ட்' படத்திற்கு பிறகு ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் நயன்தாரா. அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து மக்களுக்கும் தான் கொண்டு சென்ற பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கணவருடன் திரும்பி இருக்கிறார் நயன்தாரா. இதுகுறித்து வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.