ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் 2023 பொங்கலுக்கு நேரடியாக மோத உள்ளார்கள். விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' படங்களுக்கு இடையே ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது. 'வாரிசு' படத்தின் மூலம் விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துளளார். 'துணிவு' படத்தின் மூலம் அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
விஜய், அஜித் இருவருமே இப்படி புதிய இசைக் கூட்டணியுடன் பயணிப்பது ஒரு ஆச்சரிய ஒற்றுமை. தமன் இசையமைப்பாளராக அறிமுகமாகி 13 வருடங்கள் ஆகிவிட்டது. ஜிப்ரான் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 வருடங்கள் ஆகியுள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகுதான் முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது. அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருந்தாலும் பாடல்களுக்கும் சேர்த்து அஜித் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.
'வாரிசு, துணிவு' இரண்டு படங்களின் பாடல்களும் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன. படம் வெளியாகும் போது அந்த வரவேற்பு எப்படி அமையப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.