ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் கனெக்ட் என்கிற ஹாரர் படம் வெளியாகி உள்ளது. பொதுவாக தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நயன்தாரா, இந்தப்படம் தங்களது சொந்த தயாரிப்பு என்பதால் இந்தப் படத்தின் சிறப்பு காட்சியின்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல தியேட்டருக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வருகை தந்தார். அதேசமயம் அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த உடை குறித்து சில சர்ச்சை கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. அப்படி சமீபத்தில் ஒரு வலைதளம் ஒன்றில் வெளியாகி இருந்த அந்த புகைப்படத்திற்கு கீழாக நெட்டிசன்கள் பலர் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கண்டிக்கும் விதமாக பின்னணி பாடகி சின்மயி அதே பக்கத்தில் தனது கருத்தை காட்டமாக பதிவு செய்து இருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வலைதள நிர்வாகம் சின்மயியின் கருத்தை மற்றவர்கள் பார்க்க முடியாத வகையில் மறைத்து விட்டது. இதைக்கண்டு இன்னும் கோபமான சின்மயி, “இது போன்ற ஆபாசமான கருத்துக்கள் வருவதாக தெரிந்தால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக என்னுடைய கருத்தை மற்றவர்கள் பார்வைக்கு செல்லாமல் தடுப்பதில் இருந்தே உங்கள் அட்மினின் லட்சணம் தெரிகிறது நிஜமாகவே பரிதாபமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




