Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நாகார்ஜுனாவை போல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குட்-பை சொல்கிறாரா கமல்? வைரலாகும் பரபரப்பு தகவல்

23 டிச, 2022 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Is-Kamal-saying-goodbye-to-Bigg-Boss?

தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்றாவது சீசனிலிருந்து சமீபத்தில் முடிந்த 6வது சீசன் வரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கி வந்தார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 இம்முறை கடுமையான விமர்சனங்களை பெற்றது. தவிரவும் போட்டியின் நடுவில் ஒரு நல்ல போட்டியாளர் தேவையில்லாமல் எவிக்சன் செய்யப்பட்டதில் நாகார்ஜுனாவுக்கு உடன்பாடு இல்லை. எனவே, அந்த எவிக்சனுக்கு எதிராக குரல் எழுப்பியதோடு, சீசன் 7ஐ தொகுத்து வழங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ் பிக்பாஸின் 6வது சீசனும் தேவையற்ற ஆபாசம், அநாவசியமான கருத்துகள் என தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சொல்லப்போனால் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி, பிக்பாஸ் சீசன் 6க்கு சரியான வரவேற்பும் டிஆர்பியும் கிடைக்கவில்லை. எனவே, நாகார்ஜுனாவை போல கமலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகலாம் என சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், கமல் தற்போது இந்தியன் 2 உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வர இருப்பதால் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவது குறித்து இதுவரை கமல்ஹாசன் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுக்கவில்லை. ஒருவேளை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினால் அடுத்த சீசனை சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூட்டிங் ஸ்பாட்டில் அர்னவை சந்தித்த பெண் ரசிகைகள்! கடுப்பாகி கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்சூட்டிங் ஸ்பாட்டில் அர்னவை சந்தித்த ... 55 வயசுலேயும் இப்படி இருக்காங்களே! நடிகை சீதாவின் புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ் 55 வயசுலேயும் இப்படி இருக்காங்களே! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

23 டிச, 2022 - 16:17 Report Abuse
அநாமதேயம் பணத்திற்காக எதையும் செய்ய தயாராக உள்ள இவர் மார்க்கட்டிலிருந்து ஒதுக்கும் வரை ஒதுங்கவைவெளியேற மாட்டார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in