எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. சுதந்திரத்திற்கு முந்தைய 18ம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.
இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் கேஜிஎப் தங்க வயல் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் சில வெளிநாட்டு கலைஞர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு வரும் டிசம்பர் 21ம் தேதி நிறைவுபெற உள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது.