காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுக்கு மத்தியில் கடும் எதிர்ப்புகளையும் மீறி அதிக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதனால், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை ஐதராபாத்தில் நடத்த தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய் சென்னையில் நடக்கும் ஒரே ஒரு விழாவில் மட்டும் கலந்து கொள்வது என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கிறிஸ்துமஸுக்கு முன்னர் டிச., 24ல் அந்த விழா நடக்கும் என்றும் அந்த விழாவில் கலந்து கொண்டதும் குடும்பத்தினருடன் மாமியார் ஊரான லண்டன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
முதலில் தமிழகம் முழுவதும் சில குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்லவும் ஒரு திட்டம் இருந்ததாம். ஆனால், ரசிகர்கள் அதிக அளவில் கூடினால் என்ன செய்வது என யோசித்து சென்னையில் மட்டும் நடத்திக் கொள்ளலாம் என மற்ற ஊர் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்களாம். தயாரிப்பாளர் தில் ராஜு கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ளார். விஜய்யை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகவும் ஒரு தகவல். தயாரிப்பாளரின் வேண்டுகோளின்படி விஜய் ஐதராபாத் நிகழ்ச்சிக்காவது போவாரா இல்லையா என்பது சீக்கிரம் தெரியும் என்கிறார்கள்.