லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியின் சுட்டிக்குழந்தையாக வலம் வந்த ஷிவானி 'சூப்பர் சிங்கர்', 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். சின்னத்திரையில் இவரது சுட்டித்தனத்தை பார்த்தே பலரும் இவருக்கு ரசிகர்களாயினர். அந்த வகையில் ஷிவாங்கிக்கு இன்ஸ்டாவில் 5.1 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இத்தனை ரசிகர்கள் இருந்தாலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் அவர் தோன்றிய காலம் முதல் சிலர் அவரை க்ரிஞ்ச் சிவாங்கி என்றே கிண்டலடித்து வருகின்றனர். அதை ஷிவாங்கியும் கண்டுகொள்வதில்லை. தனது உழைப்பால் அடுத்தடுத்த உச்சத்தை தொட்டு வருகிறார். தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர், 'உங்களை க்ரிஞ்ச், ஓவர் ஆக்டிங் என சொல்பவர்களுக்கு உங்களின் ரியாக்சன் என்ன?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷிவாங்கி மூன்று ஸ்மைலி எமோஜிகளுடன் இதுதான் என் ரியாக்சன் என பதிவிட்டு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.