நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிர பலமானவர் சிவாங்கி. இதன்காரணமாக தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ள சிவாங்கிக்கு அடுத்தபடியாக சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்வரிசை நடிகர்களின் பெயரை பட்டியலிட்டு, இவர்கள் படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குக் வித் கோமாளியில் எனக்கும் அஸ்வினுக்குமிடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகியுள்ளது. அதனால் அஸ்வின் சினிமாவில் நடித்தால் அந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறார் சிவாங்கி.