இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி, அதன்பிறகு விஜய் டிவியிலேயே பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் கலந்து கொண்டார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்ற ஷிவாங்கி, இதுவரை 'டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசே தான் கடவுளடா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஷிவாங்கி அண்மையில் பேட்டி ஒன்றில் தனது காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார்.
அதில், ''நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான். ஆனால், ப்ரேக்கப் ஆகிவிட்டது. அதனால் மிகவும் வலியை அனுபவித்தேன். இப்போது நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை நானே பார்த்துகொள்ள கற்றுக்கொண்டேன். அழகான ஆண்கள் ஊர் முழுக்க இருப்பார்கள். நமக்கு அவர்களை பிடிக்கும். ஆனால், அவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெண்கள் காதலை சொல்வதைவிட ஆண்கள் காதலை சொன்னால் தான் சரியாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.