'சலார்' டிரைலர் - மற்றுமொரு 'கேஜிஎப்' சாயல் படமா ? | அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல் | பெங்களூர் டேஸ் பைக் ரேஸ் காட்சி : அஞ்சலி மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் | பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி | மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள் | அஜித் - வெற்றிமாறன் கூட்டணி? | 18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் | ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படம் | அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ |
மலையாள திரையுலகில் தொடர்ந்து மோகன்லாலை வைத்து படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் வெளியான 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தை தொடர்ந்து மீண்டும் ஆந்தாலாஜி படம் ஒன்றுக்காக மோகன்லாலை வைத்து அதில் இடம்பெறும் ஒரு குறும்படமாக ஓலவும் தீரவும் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் கடந்த வருடம் மிகுந்த சர்ச்சைகளில் அடிபட்ட இளம் நடிகர் ஷேன் நிகம் கதாநாயகனாக நடிக்கும் கொரோனா பேப்பர்ஸ் என்கிற படத்தை இயக்கி வந்தார் பிரியதர்ஷன்.
கடந்த அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்துள்ளார் பிரியதர்ஷன். இந்த படத்தில் வினீத் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார்.. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற என்ன தான் கேஸ் குடு என்கிற படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் மலையாள படம் இது.