பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் |
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக ரச்சிதா மஹாலெட்சுமி கலந்து கொண்டுள்ளார். சீரியல்களின் மூலம் பிரபலமான ரச்சிதாவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் அவர் மீதான எதிர்பார்ப்பும் அவருக்கு கிடைக்கும் ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரச்சிதா, தனது வாழ்க்கை பற்றி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் குழந்தையை தத்தெடுப்பது பற்றி விக்ரமனிடம் பேசும் ரச்சிதா, 'நான் 35 வயசுல ஒரு குழந்தையை தத்தெடுப்பேன். ஏன் அப்படி 35 வயச ஒரு அளவுகோல வச்சிருக்கேன்னா, அப்ப நான் இன்னும் நிறைய கத்துக்கிட்ட அனுபவம் கிடைக்கும். அதுமூலமா ஒரு குழந்தைய வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்' என்று கூறுகிறார். ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று விக்ரமன் கேட்க ரச்சிதா, 'பெண் குழந்தை தான்' என்று கூறுகிறார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் திருமண வாழ்வில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் ரச்சிதா பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் ரச்சிதாவின் கணவர் தினேஷ், ரச்சிதாவுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்து வருகிறார். ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்னரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசுவதை பார்த்தால், அவர் தினேஷூடன் சேர்ந்து வாழ்வாரா? இல்லையா என ரசிகர்களே சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.