'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனவத். பாலிவுட் ஹீரோக்களைப் பற்றி கடுமையான கருத்துக்களுடன் விமர்சிக்கும் ஒரு தைரியமான நடிகை எனப் பெயரெடுத்தவர். பாலிவுட்டின் நெப்போட்டிசத்தை எதிர்த்து அதிகமாகக் குரல் கொடுத்த ஒரே நடிகை என்றும் சொல்லலாம்.
ஹிந்தியில் அவரது ஆரம்ப கால கட்டங்களிலேயே 2008ம் ஆண்டு தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியையும் பெறவில்லை, அவரையும் யாரும் கவனிக்கவில்லை. அதே வருடத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'பேஷன்' படம் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று சொல்லப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் மூன்றாவது முறையாக 'சந்திரமுகி 2' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. முதலிரண்டு படங்கள் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில் 'சந்திரமுகி 2' கங்கனாவுக்கு கவனம் ஈர்க்கும் படமாக அமையுமா என்பது படம் வெளிவரும் போது தெரியும்.