‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
சோகம், மிடுக்கு, நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து கலையுலகில் கோலோச்சிய நடிகைகளில் குறிப்பிடும்படியானவர், சவுகார் ஜானகி. இன்று தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
* திரையுலக வரலாற்றில் 72 ஆண்டுகளாக கலைப்பணியாற்றி வரும் ஒரே தென்னிந்திய திரைநட்சத்திரம் இவர்.
* ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று பிறந்தார்.
* வெங்கோஜிராவ் மற்றும் சச்சிதேவி தம்பதியருக்கு மகளாக பிறந்த இவரது இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி.
* தனது ஆரம்ப பள்ளிக் கல்வியை சென்னையில் உள்ள “சாரதா வித்யாலயா பள்ளி”யில் பயின்றிருக்கின்றார்.
* படித்துக் கொண்டிருந்தபோதே “சென்னை வானொலி”யில் வானொலி கலைஞராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்திருக்கின்றார்.
* இவரது வானொலி நாடக நிகழ்ச்சியை கேட்ட தயாரிப்பாளர் பி என் ரெட்டி, தனது “குணசுந்தரி கதா” என்ற படத்திற்காக இவரை அணுக, குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
* 1947ஆம் ஆண்டு இவரது 16வது வயதில் சங்கரமஞ்சி சீனிவாசராவ் என்பவரோடு திருமணமும் நடந்தது.
* குடும்ப சூழல் காரணமாக கையில் குழந்தையுடன் மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்ற இவருக்கு “சௌகார்” பட வாய்ப்பு கிடைத்தது.
* 1950ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம்தான் இவரது முதல் திரைப்படம். இவருக்கு ஜோடியாக நடித்த என் டி ராமாராவுக்கும் இதுவே முதல் படம்.
* 1952ஆம் ஆண்டு வெளிவந்த “வளையாபதி” என்ற திரைப்படத்தின் மூலம்தான் தமிழில் இவர் நாயகியாக அறிமுகமானார்.
* இவரது தங்கை நடிகை கிருஷ்ணகுமாரியும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக அறியப்பட்டவர்.
* “படிக்காத மேதை”, “பாலும் பழமும்”, “பார் மகளே பார்”, “புதிய பறவை”, “உயர்ந்த மனிதன்” என சிவாஜியுடன் இவர் நடித்த திரைப்படங்கள் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டவை.
* “பணம் படைத்தவன்”, “பெற்றால்தான் பிள்ளையா”, “தாய்க்குத் தலைமகன்”, “ஒளிவிளக்கு” ஆகியவை எம் ஜி ஆரோடு இவர் இணைந்து நடித்தவை.
* “ஒளிவிளக்கு” திரைப்படத்தின் போது யார் பெயரை திரையில் முதலில் இடம்பெறச் செய்வது என்ற பிரச்னையில் ஜெயலலிதாவிற்கும், இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.
* 1984ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர் குணம் பெற “இறைவா உன் மாளிகையில்” என்ற இவர் நடித்த பாடல் தமிழகமெங்கும் ஒலிபரப்பப்பட்டது.
* கே பாலசந்தரின் “நீர்க்குமிழி”, “பாமா விஜயம்”, “எதிர்நீச்சல்”, “இருகோடுகள்”, “காவியத்தலைவி”, “தில்லுமுல்லு” இவரது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பிற்கு சான்றுகள்.
* “காவியத்தலைவி”, “ரங்கராட்டினம்” என்ற திரைப்படங்களை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் அறியப்பட்டார் சவுகார் ஜானகி.
* எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், என் டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், ராஜ்குமார், பிரேம்நஸீர், ரஜினி, கமல் என அனைத்து திரை ஜாம்பவான்களுடனும் இணைந்து நடித்த பெருமைமிக்கவர்.
* “வானவராயன் வல்லவராயன்”, “தம்பி”, “பிஸ்கோத்” போன்ற திரைப்படங்களில் இன்றைய தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்து தனது கலைப்பணியை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
91வது அகவை முடிந்து 92ல் அடி எடுத்து வைக்கும் இந்த அபூர்வ திரைக்கலைஞர், இன்னும் ஏராளமான படங்களில் நடித்து, இன்புற்று வாழ வாழ்த்துவோம்!