‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அதன் பிறகு கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் விஜய் 67வது படத்திலும் மாஸ்டர், விக்ரம் படங்களின் வில்லன் கேரக்டர் இடம் பெறுவதாகவும், அதனால் விஜய் 67வது படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கப் போகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அதை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அது குறித்து ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி .
அவர் கூறுகையில், விக்ரம் படத்தில் நான் நடித்த சந்தானம் கேரக்டரை பொறுத்தவரை அந்த படத்தோடு அது முடிந்து விட்டது. மீண்டும் அந்த கேரக்டர் உயிர் பெற்று வருவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்திலோ அல்லது விஜய்யின் 67வது படத்திலோ சந்தானம் கேரக்டர் வருவதற்கு வாய்ப்பில்லை. விஜய் 67வது படத்தில் நடிப்பதற்கு இதுவரை என்னை லோகேஷ் கனகராஜ் அணுகவும் இல்லை. அதனால் விஜய் 67வது படத்தில் கண்டிப்பாக நான் நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார் விஜய் சேதுபதி.




