புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முதன்முறையாக அஜித் படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் ஒவ்வொன்றாக துவங்கி உள்ளன. துணிவு படத்தின் ஸ்டில்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‛சில்லா சில்லா' என்ற முதல்பாடலை வருகிற டிச., 9ம் தேதி வெளியிடுகின்றனர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் பாடி உள்ளார்.