டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரதீப் ரங்கநாதன் இயக்கம் நடிப்பில் தமிழில் வெளிவந்த படம் 'லவ் டுடே'. இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றது. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாராகி 70 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இப்படத்தைத் தெலுங்கில் டப்பிங் செய்து அதே பெயரில் நேற்று வெளியிட்டார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தைத் தயாரித்து வரும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தான் இப்படத்தைத் தெலுங்கில் வெளியிட்டுள்ளார். ஒரு நேரடி தெலுங்குப் படம் போல படத்தை அவர் விளம்பரப்படுத்தினார். நேற்று முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விமர்சனங்களும் படத்திற்கு பாசிட்டிவ்வாக வருவதால் இந்தப் படம் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வெளியான சில நேரடி தெலுங்குப் படங்களைக் காட்டிலும் 'லவ் டுடே' படத்தின் முதல் நாள் வசூல் அதிகமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் இந்த இரண்டு நாட்களிலேயே படம் லாபத்தில் சென்று விட வாய்ப்புள்ளதாம்.




