'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
சினிமா பார்ப்பது என்பது சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் இந்தக் காலத்தில் பிரம்மாண்டமான 'ஐ மாக்ஸ்' தியேட்டர்களில் படங்களைப் பார்ப்பது சிறப்பான அனுபவம். நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் 'ஐ மாக்ஸ்' தியேட்டர்கள் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரண்டே இரண்டு தியேட்டர்கள்தான் இருக்கிறது.
நாட்டிலேயே மிகப் பெரும் சினிமா ஸ்கிரீன் கொண்ட தியேட்டராக ஐதராபாத்தில் உள்ள பிரசாத் தியேட்டர் விளங்கப் போகிறது. அங்கு 64 அடி உயரம், 101.6 அடி அகலம் கொண்ட ஸ்கீரினை தற்போது அமைத்து வருகிறார்கள். நாளை முதல் இந்த பெரிய ஸ்கிரீனில் திரைப்படங்களைப் பார்க்கலாம் என்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள்.
அடுத்த மாதம் வெளியாக உள்ள 'அவதார் 2' படத்தை அப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரையில் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கருதுகிறார்கள். ஐதராபாத் சினிமா ரசிகர்களுக்கு இந்த பிரம்மாண்ட திரை ஒரு இனிய சினிமா அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது.