'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
வெங்கட்பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாகசைதன்யா நடிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நாகசைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‛கஸ்டடி' என பெயரிட்டுள்ளனர். இதில் நாகசைதன்யாக போலீசாக நடிக்கிறார். ஆனால் அவரை ஏகப்பட்ட போலீசார் துப்பாக்கிமுனையில் பிடித்து வைத்திருப்பது போன்று இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலானது.