என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் நீது சந்திரா. அதன்பிறகு தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3, படங்களில் நடித்தார். கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தார். 5 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வரும் படம் 'ஒன் டூ ஒன்' படத்தில் நடிக்கிறார். இதை திருஞானம் இயக்குகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகை ராகினி திவேதி, சுந்தர்.சி மனைவியாக நடிக்கிறார். அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். இதில் இப்போது நீது சந்திரா இணைந்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.