175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
குஜராத்தின் சூரத் நகரில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நமீதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதாவுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று இரட்டை குழந்தை பிறந்தது. அதையடுத்து தனது குழந்தைகள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத் நகரில் பெயர் சூட்டு விழா அவரது உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அப்போது நமீதாவின் மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, மற்றும் கியான்ராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து நமீதா சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கிருஷ்ணா ஆதித்யா, கியான்ராஜ் என்ற இரண்டு பிள்ளைகளும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கடவுள் கிருஷ்ணர் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள். அதன் காரணமாகவே இரண்டு குழந்தைகளுக்கும் கிருஷ்ணரின் பெயரை சூட்டி உள்ளேன். சூரத்தில் நடைபெற்ற இந்த பெயர் சூட்டு விழாவில் எனது உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் என்று நமீதா பதிவிட்டு இருக்கிறார்.