அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோல் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனபோதிலும் விஜய்யின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் -அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதேபோல் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு இரண்டு ஏரியாக்களுக்கு விஜய் -அஜித் படங்களுக்கு சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கூடிய சீக்கிரமே அஜித் - விஜய் படங்கள் தமிழகம் முழுக்க எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக போகிறது என்பது குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.