20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் |
எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் நடித்துள்ளார் அஜித்குமார். மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. அதோடு வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அந்த தகவலை ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது லைகா நிறுவனம். அதோடு அஜித்தின் துணிவு படத்துடன் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து துணிவு படத்தை லைகா நிறுவனம் வெளிநாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்திருப்பதாகவும், திரையரங்கங்களை புக் செய்யும் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த லைகா நிறுவனம் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62வது படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.