வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு |
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கனெக்ட். இந்த படத்தில் அவருடன் அனுபம் கேர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ்க்கு கனெக்ட் படம் திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஷால் நடித்துள்ள லத்தி படமும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதனால் வரப்போகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று விஷாலின் லத்தி படமும், நயன்தாராவின் கனெக்ட் படமும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உறுதியாகி இருக்கிறது. மேலும், விஷால் நடித்துள்ள லத்தி படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.