ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழில் மிருகம் படத்தில் அறிமுகமான ஆதியும், டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணியும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்தி வைரலாகி வருகிறது. அதையடுத்து தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் நிக்கி கல்ராணி. அதில், நான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி பரவும் செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அது வெறும் வதந்தியே. உண்மையிலேயே நான் கர்ப்பமானால் அது குறித்த செய்தியை கண்டிப்பாக வெளியிடுவேன். அதைவிட எனக்கு சந்தோசமான விஷயம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.