'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் மெட்ராஸ் படத்தில் கார்த்தியின் நண்பனாக இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் கலையரசன். அதன்பிறகு ஹீரோக்களின் நண்பராகவும் தனி கதாநாயகனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் என மாறிமாறி நடித்து வருகிறார். இந்த வாரம் உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகியுள்ள கலகத்தலைவன் படத்திலும் உதயநிதியின் நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் நண்பனுக்காக பரிதாபமாக உயிர் விடுவதாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதேசமயம் சமீபத்தில் வெளியான பேட்டைக்காளி என்கிற வெப்சீரிஸிலும் இவரது கதாபாத்திரம் எதிர்பாராதவிதமாக நண்பனால் கொல்லப்படுவதாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக மெட்ராஸ் படத்திலும், சூர்யாவுடன் இணைந்து நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் கூட இதேபோன்று இவரது கதாபாத்திரம் இடையிலேயே இறந்து விடுவதாக உருவாக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவரது கதாபாத்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ விதி தொடர்ந்து விளையாடி வருவது ஆச்சரியமான ஒன்றுதான்.