நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. அதனால்தான் கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு மேல் திரையுலகில் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கிறார். இந்த நிலையில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ள அனல் மேலே பனித்துளி என்கிற படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதே சமயம் இன்னொரு பக்கம் நயன்தாராவை வைத்து அறம் என்கிற படத்தை இயக்கிய கோபி நாயனார், தற்போது இயக்கிவரும் மனுஷி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வந்தார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மனுஷி திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டதால் அந்த படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது..